News Update :

BTricks

New Wap http://neduntheevu.co.cc/ T.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்...எதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது....

Moto GP News

Basketball News

Formula 1 News

தாண்டியடியில் மறைந்திருந்த நபர்களை பிடிக்க முயன்ற பொதுமக்கள் மீது அதிரடிப்படையினர் தாக்குதல்!

Friday, August 19, 2011

மட்டக்களப்பு தாண்டியடி காட்டுப்பகுதியில் இன்று மாலை மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அங்கு வந்த அதிரடிப்படையினர் மக்களை தடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் படையினர் ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் 5 பேரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் என தன்னிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மூண்டாளம்மடு, நடராசானந்தாபுரம், தாண்டியடி கிராம மக்கள் திரண்டு மறைந்திருந்த நபர்களை முற்றுகையிட்ட போது அங்கு வந்த படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கலைத்தனர் என்றும் மறைந்திருந்த நபர்களை அவர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர் என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும் படையினர் தடுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா தெரிவித்தார்.
தற்போது இரவாகி விட்டதால் அப்பகுதிக்கு தன்னையும் செல்ல படையினர் அனுமதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பொதுமக்கள் வவுணதீவு இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தான் இராணுவ மற்றும் அதிரடிப்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியிருப்பதாக செல்வராசா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பல பெண்கள் காயமடைந்துள்ளனர்

neduntheevunews: ஆசிய வான் பரப்பை கிழிக்கப் போகும் இலங்கை-அமெரிக்க ...

neduntheevunews: ஆசிய வான் பரப்பை கிழிக்கப் போகும் இலங்கை-அமெரிக்க ...: இலங்கை விமானப்படை தெரிவித்துள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையில் நடைபெறும் விமானப்படை கூட்டுப் பயிற்சியொன்றில் அமெரிக்க விமானப்படையுடன் இணைந...

ஆசிய வான் பரப்பை கிழிக்கப் போகும் இலங்கை-அமெரிக்க கூட்டுப் பயிற்சி

இலங்கை விமானப்படை தெரிவித்துள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையில் நடைபெறும் விமானப்படை கூட்டுப் பயிற்சியொன்றில் அமெரிக்க விமானப்படையுடன் இணைந்து தான் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமானப்படை விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இரு வாரங்களுக்குள் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹார்ஷா அபேவிக்கிரம கூறுகையில் இக்கூட்டுப் பயிற்சியானது அமெரிக்க விமானப்படையின் பசுபிக் கட்டளைப் பிரிவின் சிந்தனையில் உதித்தாகும் என தெரிவித்தார்.

இப்பயிற்சிகளில் அவுஸ்திரேலிய விமானப்படை, மலேஷிய விமானப்படை, பங்களாதேஷ் விமானப்படை ஆகியனவும் பங்குபற்றவுள்ளன.

பிராந்திய நாடுகளுடனான இடைத்தொடர்புகளை மேம்படுத்தவும் பிராந்திய நாடுகளின் விமானப்படைகளுக்கு சர்வதேச அனுபவங்களை பெற்றுக்கொடுக்கவும் உலகெங்கும் இத்தகைய பல்நாட்டு கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு வகையான பரசூட்கள் மூலம் பல்வேறு பொருட்களை விமானத்திலிருந்து தரையிறக்குதல் போன்ற பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன. இப் பயிற்சியானது இரத்மலானை அம்பாறையிலுள்ள விமானப்படைத் தளங்களில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.

இராணுவ மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளை வழங்குதல் இயற்கை அனர்த்தங்களை வினைத்திறனுடன் கையாள்வதற்கு ஏற்ப இந்தோ-பசுபிக் நாடுகளின் விமானப்படை ஆற்றல்களை விருத்தி செய்தல் ஆகியனவே இப்பயிற்சிகளின் பிரதான இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் அழைத்துச் சென்று ஏமாற்றும் பெண்கள் ! ஆண்கள் ஜாக்கிரதையாம் !

Thursday, August 18, 2011


  by admin
இரவு நேரங்களில் கொழும்பு, புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வரும் ஆண்களை ஏமாற்றி ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று அவர்களிடமிருந்து பணம், நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை அபகரித்துக்கொண்டு தலை மறைவாகும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பத்துப் பெண்களைக் கைது செய்துள்ளனர். இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 20,23 வயதுக்கிடைப் பட்டவர்களெனவும், இவர்கள் தனமல்வில, மாத்தறை, கண்டி, மொரட்டுவ மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் ஆண்களை மயக்கி பணத்தைச் சுருட்டும் விதமே தனி ! வசதியாகக் காணப்படும் ஆண்களை லாவகமாக மடக்கி ஹோட்டலுக்குப் போவோமா என்று கேட்க்க அவர்களும் விலைமாது என நினைத்து அவர்களுடன் செல்கின்றனர். ஏற்கனவே தமக்கு பரீட்சையமான ஹோட்டலுக்குச் சென்று அங்கே முதலில் தம்மோடு வந்த ஆண்களுக்கு மதுவையும் பின்னர் அவர்களுக்கே தெரியாமல் போதைப் பொருட்களையும் இப் பெண்கள் கொடுப்பார்களாம். போதை தலைக்கேறி கிறிதியடித்து ஆண்கள் சுருண்ட பின்னர் அவர்களிடம் இருக்கும் மோபைல் போன் பணம், நகைகள் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அவர்கள் மாயமாகிவிடுவார்கள்.

எழுந்து பார்த்தால் எதுவும் இருக்காது போட்டிருக்கும் துணியைத் தவிர. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் ஒரு நபரின் சூ வையும் இந்த அழகிகள் களற்றிச் சென்றுவிட்டனராம் என அவர் பொலிசாரிடம் புகார் கூறியுள்ளார்.

கழுத்தறுத்து கொலை செய்ய தமிழ் பெண் திட்டம்: INTERPOL பிடியாணை ?



திருகோணமலையில் வைத்து கழுத்தறுத்து ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் 02.08.2011 அன்று இச் சம்பவம் நடந்ததாக பொலிசில் பதிவாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து சென்ற கந்தையா சிவபாலன் என்பவரை அவரது உறவினர்கள் சிலர் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளனர். இதில் சுஜா என்னும் பெண் இக் கொலை முயற்சிக்கு மூலகாரணமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இப் பெண் தனது உறவினர்கள் சிலரை வைத்து சிவபாலனைக் கொலைசெய்ய முற்பட்டுள்ளார். அவர் அனுப்பிய ஆட்கள் தலைக் கவசம்(ஹெல்மெட்) அணிந்து சிவபாலன் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளனர். அதிஷ்டவசமாக இவர் உயிர்தப்பினார். சந்தேக நபரான சுஜா இலங்கையில் இருந்து தப்பி சுவிஸ் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ள பொலிசார் அவரைக் கைதுசெய்து தரும்படி இன்ரர் போல் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.( அதன் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது)

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த கிருஷாந்தன் எனபவரையும் பொலிசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளைப் பொலிசார் எடுத்துள்ளனர். குடும்பச் சண்டை காரணமாகவே சுஜா என்னும் ஈழத் தமிழ்ப்பெண் சிவபாலனை தீர்த்துக்கட்ட எண்ணியதாக அவர் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்தார். தான் இலங்கை சென்றவேளை அங்கே இருக்கும் உறவினர்கள் மற்றும் மேலும் ஒரு ஆயுததாரியையும் காசுக்கு அமர்த்தி இக் கொலைமுயற்சியை அவர் மேற்கொண்டார் என சிவபாலன் தெரிவித்தார்.


08.08.2011 அன்று வெளியான முன்னைய செய்தி :



சுதந்திரம் அடைந்த இலங்கையில் சமாதானமே நிலவி வருவதாக நினைத்து புலத்தில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கு விடுமுறையில் சென்று வருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகின்றது.திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு 8909 என்னும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இது விடயமாக காவற்துறையில் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் நடக்கும் இப்படியான பயங்கர சம்பவங்களுக்கு சிவிலுடையில் வருகின்ற கடற்படைக்கும் யுத்தகாலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்த கும்பலுக்கும் தொடர்புள்ளதாக அறியப்படுகின்றது.

இவ் விடயங்களை மேலிடம் அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு சமாதானத்தை நிலைநாட்ட பாடுபடும் பாதுகாப்பு செயலாளர் கவனத்திற்கு எடுத்து திருகோணமலையில் மூவின மக்களும் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கும்பலால் மக்கள் தினமும் பீதியுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.


நெடுந்தீவுப்பகுதியில் சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த முயற்சி

Wednesday, August 17, 2011

யாழ்.குடாநாட்டில் நெடுந்தீவுப்பகுதியில் சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவுப்பகுதியில் பயன்படுத்தப்படாதுள்ள அரச காணிகளில் முதல் கட்டமாக 360 குடும்பங்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியள்ளது. கடற்படையின் பாதுகாப்புடன் இம்மீனவ குடும்கங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவுள்ளன.

நெடுந்தீவுப்பகுதியின் குதிரைகளின் மேய்ச்சல் நிலமாகவுள்ள வெல்லை வெளி உள்ளிட்ட பகுதிகளே சிங்கள குடும்பங்களது குடியேற்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்குடாநாட்டினை சொந்த இடமாக கொண்டிருந்த இச்சிங்கள மக்கள் கடந்த கால யுத்தங்காரணமாக இடம்பெயர்ந்தவர்களென வெளி உலகிற்கு காட்டிக்கொள்ள இலங்கை அரசு முற்படுகின்றது. அவ்வகையில் குடியேற்றப்படும் சிங்கள குடும்பங்களுக்கு இந்திய அரசின் வீடமைப்புத்திட்டங்கள் ஊடாக வீடுகளை அமைத்துக்கொடுக்கவும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தீவக பகுதிகளை இலக்கு வைத்து அண்மைக்காலமாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு முழு அளவினில் முயற்சித்து வருகின்றது. புங்குடுதீவுப்பகுதியில் இவ்வாறு சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதியுடன் தான் நடத்திய பேச்சுக்களை அடுத்து சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏனினும் உள்ளுர் மீனவர்களிடையே நம்பித்கையீனமான சூழலே காணப்படுகின்றது.

அழைத்துச் செல்லப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் கடற்படைத்தளங்களில் தங்க வைக்கப்படடிருக்கலாமென  உள்ளுர் மீனவர்களிடையே பேச்சுக்கள் உலாவிவருகின்றது.
ஏற்கனவே வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கவென கூறி ஆயிரக்கணக்கான  சிங்கள மீனவ குடும்பங்கள் குடியமர்ந்துள்ளன. இவர்களுக்கெதிராக உள்ளுர் மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் தீவகப்பகுதிகளை நோக்கி அரசின் பார்வை திரும்பியுள்ளது.

பெருக்கு மரம்...


imageபெருக்கு மரம் இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது.இதன் அடி மரம் மிகவும் விசாலமானது.இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது.
இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம்
எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான
மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும்
இதுதான்.தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி
முனையில் உள்ளது.

Football News

 

© Copyright neduntheevunews 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.