நெடுந்தீவுப்பகுதியின் குதிரைகளின் மேய்ச்சல் நிலமாகவுள்ள வெல்லை வெளி உள்ளிட்ட பகுதிகளே சிங்கள குடும்பங்களது குடியேற்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்குடாநாட்டினை சொந்த இடமாக கொண்டிருந்த இச்சிங்கள மக்கள் கடந்த கால யுத்தங்காரணமாக இடம்பெயர்ந்தவர்களென வெளி உலகிற்கு காட்டிக்கொள்ள இலங்கை அரசு முற்படுகின்றது. அவ்வகையில் குடியேற்றப்படும் சிங்கள குடும்பங்களுக்கு இந்திய அரசின் வீடமைப்புத்திட்டங்கள் ஊடாக வீடுகளை அமைத்துக்கொடுக்கவும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தீவக பகுதிகளை இலக்கு வைத்து அண்மைக்காலமாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு முழு அளவினில் முயற்சித்து வருகின்றது. புங்குடுதீவுப்பகுதியில் இவ்வாறு சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதியுடன் தான் நடத்திய பேச்சுக்களை அடுத்து சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏனினும் உள்ளுர் மீனவர்களிடையே நம்பித்கையீனமான சூழலே காணப்படுகின்றது.
அழைத்துச் செல்லப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் கடற்படைத்தளங்களில் தங்க வைக்கப்படடிருக்கலாமென உள்ளுர் மீனவர்களிடையே பேச்சுக்கள் உலாவிவருகின்றது.
ஏற்கனவே வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கவென கூறி ஆயிரக்கணக்கான சிங்கள மீனவ குடும்பங்கள் குடியமர்ந்துள்ளன. இவர்களுக்கெதிராக உள்ளுர் மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் தீவகப்பகுதிகளை நோக்கி அரசின் பார்வை திரும்பியுள்ளது.


0 comments:
Post a Comment