News Update :

தாண்டியடியில் மறைந்திருந்த நபர்களை பிடிக்க முயன்ற பொதுமக்கள் மீது அதிரடிப்படையினர் தாக்குதல்!

Friday, August 19, 2011

மட்டக்களப்பு தாண்டியடி காட்டுப்பகுதியில் இன்று மாலை மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அங்கு வந்த அதிரடிப்படையினர் மக்களை தடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் படையினர் ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் 5 பேரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் என தன்னிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மூண்டாளம்மடு, நடராசானந்தாபுரம், தாண்டியடி கிராம மக்கள் திரண்டு மறைந்திருந்த நபர்களை முற்றுகையிட்ட போது அங்கு வந்த படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கலைத்தனர் என்றும் மறைந்திருந்த நபர்களை அவர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர் என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும் படையினர் தடுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா தெரிவித்தார்.
தற்போது இரவாகி விட்டதால் அப்பகுதிக்கு தன்னையும் செல்ல படையினர் அனுமதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பொதுமக்கள் வவுணதீவு இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தான் இராணுவ மற்றும் அதிரடிப்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியிருப்பதாக செல்வராசா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பல பெண்கள் காயமடைந்துள்ளனர்
Share this Article on :

0 comments:

Post a Comment

 

© Copyright neduntheevunews 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.